மடு திருத்தல ஆவணங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன?

ஏப்ரல்3, 2008 at 3:11 பிற்பகல் | In 1 | Leave a Comment

வீரகேசரி இணையம் 4-3-2008 12:42:33 -ustamilwordpresscom-128.jpg

மன்னாரில் மடுவை அண்டிய பகுதிகளில் படையினருக்கும்,விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து மடு திருப்பதியிலிருந்த முக்கிய ஆவணங்களும், இதர பொருட்களும் ஆலய பணியாளர்களால் இன்று காலை முதல் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருவதாக, மன்னார் மறைமாவட்ட ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகை சற்று முன்னர் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்..

அவர் தொடர்ந்து தகவல் தெரிவிக்கையில் வரலாற்று சிறப்பு மிக்க மாதா தேவாலயம் அமைந்துள்ள மடு பகுதியை போர் நடவடிக்கைகளிலிருந்து தவிர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி மௌனபிரார்த்தனையும், மௌன ஊர்வலமும், மன்னார் கத்தோலிக்க திருசபையால் நேற்று காலையில் மன்னாரில் நடத்தப்பட்டதாகவும், இதில் பல்லாயிரகணக்கான மக்கள் கலந்து கொண்டதாகவும், மடுத்திருப்பதியில் இருக்கும் குருமார்களும், பணியாளர்களும், அருட் துறவிகளும், அங்கிருந்து வெளியேறுவதா இல்லையா என இன்னும் சற்று நேரத்தில் முடிவெடுக்க உள்ளதகவும் அவர் மேலும் தெரிவித்தார்..

மன்னாரின் முன்னரங்க பகுதிகளில் இருத்தரப்பிக்குமிடையில் மோதல்கள் தீவிரமடைந்து வருவதை தொடர்ந்து மடுப்பகுதி நிலைமை மோசமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No Comments Yet »

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

XHTML: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.