எம்மக்கள் படும் துன்ப துயரங்கள் வார்த்தைகளாளோ, எழுத்திலோ விபரிக்க முடியாது, துயரங்கள் இன்னும் தொடர் கதையானது…..
ஜூன்13, 2009 at 1:28 காலை | In TAMIL | 1 Commentஎம் இனிய புலம்பெயர் உறவுகளே
முட்கம்பிச் சிறைகளில் இருந்து எம் இனிய உறவுகளை மீட்பதற்கான காத்திரமான போராட்டங்களை அவசரமாக, அவசியமாக முன்னெடுங்கள்.
அவர்களை அவர்களது சொந்த நிலங்களில் வாழ வையுங்கள்.
நீங்கள் இதுவரை உங்கள் உறவுகளின் மீட்சிக்காக மேற்கொண்ட நியாயமான போராட்டங்களை சர்வதேசம் கண்டு கொள்ளாமல் எமது உரிமைப் போராட்டங்களை நசுக்குவதிலேயே குறிக்கோளாய் இருந்துள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள். அதிலும் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள். எமது மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை எமது மக்களுக்கு பெற்றுக் கொடுக்கக் கூடிய தலைமை ஒன்றை எதிர்பார்த்து எம்மக்கள் ஏங்கும் இன்றைய நிலையில்,
எம்மின விடுதலைத் தேரினை உருவாக்குவதற்கு நீங்கள் உங்கள் உழைப்பை உவந்தளித்தீர்கள். அத்தேரினை உருவாக்கிய சிப்பிகள், அத்தேரின் வடம்பிடித்து இழுத்தவர்கள், அத்தேரினை இழுத்தவர்களுக்கு அருகில் நின்று உத்வேகம் கொடுத்தோர் அனைவரும் இன்று ஏதிலிகளாக்கப்பட்டு முட்கம்பிச் சிறைகளுக்குள் அடைக்கப்பட்டு அவர்களின் எதிர்காலம் சூனியமாக்கப்பட்டுள்ளது.
இன்று அவர்கள் உணவுக்காக கையேந்தி, கொழுத்தும் வெய்யிலில் நீண்ட வரிசைகளில் காத்து நிற்பதை நீங்கள் நேரில் பார்ப்பீர்களானால் இரத்தக் கண்ணீர் வடிப்பீர்கள். அவர்களின் எதிர்காலம் அடிப்படைத் தேவைகளுக்காக வரிசைகளில் காத்து நிற்பதிலேயே கழிந்து கொண்டு இருக்கிறது. பெரியோர், சிறுவர்கள் அனைவரும் போசாக்கற்றவர்களாக இன்னொரு சோமாலியா கிராமங்கள் உருவாகிக் கொண்டு இருக்கிறது. நாளாந்தம் போசாக்கின்றி போதிய மருத்துவ வசதியின்றி, தொற்று நோய்களால் உங்கள் இரத்த உறவுகள் இறந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்றுங்கள்.
எம் மக்களின் அவலநிலை தொடர்பாக வவுனியா முகாம்களின் சம்பவங்களை தங்களுக்கு தெரியப்படுத்தலாம் என நினைக்கிறோம்.
பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு சொந்தமான உணவு பொருட்களை ஏற்றிய ஒரு சில பாரஊர்திகள் தமது சோதனை நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு, பல ஆயிரம் மக்கள் வாழும் முகாம்களுக்குள் காலை 10.00 மணியளவில் உள்நுழையும், அவை ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு இடங்களில் நிறுத்தப்பட்டு பொருட்கள் விற்பனை செய்யப்படும். அங்கும் நீண்ட வரிசைகள், மாலைவரை காத்திருந்தும் பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை. இதனால் காலையில் பாரஊர்தி உள்நுழையும் போதே அது எங்கு நிறுத்தப்படப் போகிறது என்பது தெரியாமல் எப்படியாவது இன்று பொருட்களைப் பெற்றுக் கொண்டு விட வேண்டும் என்ற ஏக்கத்தினால் பாரஊர்தி நிறுத்தப்படும் இடம்வரை பாரஊர்திகளுக்குப் பின்னால் ஆண்கள், பெண்கள், முதியோர் சிறுவர்கள் என ஒரு பெரிய கூட்டமே ஓடிக் கொண்டிருக்கும், அப்படி ஓடியும் மாலைவரை காத்திருந்தும் உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போக சோகம் ததும்பிய முகங்களுடன் தத்தமது கூடாரங்களுக்குத் திரும்பும் எம் உறவுகள். மீண்டும் மீண்டும் அடுத்த நாள் காலையில் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் என்ற புராணக்கதை போல் உணவுக்காக ஓடும் எம்மக்களின் அவலம்.
சமைத்த உணவுப் பொட்டலங்களைத் தாங்கிய ஊர்தி பவனிகள். ஒரு பொட்டலத்தைப் பெறுவதற்கு பலர் அடிபடும் துயரம். மதியநேர உணவு காலையிலேயே தயாரிக்கப்படுவதால் உணவுப் பொட்டலங்கள் பழுதான நிலையிலும் அவற்றையும் பெற்று உண்பதற்கு தயாராக வரிசைகளில் நிற்கும் எம்மக்களின் அவலம். உணவுப் பொட்டலங்களை கொண்டு வருபவர்களிடம் பழுதாகி விட்டாகவும் இதை ஏன கொடுக்கிறீர்கள் என சில பெரியவர்கள் முறையிடும் போது இது கிடைப்பதே உங்களுக்கு ஏதோ கடவுள் கொடுத்த கொடை என கூறும் சில மனித தன்மை அற்ற ஆசாமிகள்.
வேளைக்கே முட்கம்பி கூட்டினுள் அடைக்கப்பட்டவர்களுக்கு ஆங்காங்கே முளைத்திருக்கும் சமயற்கூடங்கள், அவற்றில் சுழற்சிமுறையில் சமையல் செய்யும் அம்மக்கள். போதிய சமையல் அனுபவம் இல்லாதவர்களால் சமையல் செய்யப்படும் உணவுகளால் எம்மக்களின் சுவை வாங்கிக் கலன்கள் படும் வேதனை, இவற்றை உண்பதால் அம்மக்களின் சமிபாட்டு உறுப்புக்கள் படும் வேதனை இவை பற்றி மக்கள் முறையிடச் சென்றால் முறைப்பாட்டை பெற்றுக் கொள்பவர்கள் இவை எல்லாம் உங்களுக்கு விதிக்கப்பட்ட சாபக்கேடுகள் என்பது போல் கதைகள் பார்வைகள்.
எம்மக்களுக்கான மீட்பர்கள் போல் தம்மை காட்டிக் கொள்ளும் சில சிங்கள சகோதரர்கள் எமது மக்கள் அணிவதற்கான பழைய உடைகளைக் கொண்டு வந்து வாகனங்களில் இருந்து அவற்றை எறிவதும் அவற்றை எம்மக்கள் எடுத்துச் செல்வதும் வேதனை அளிக்கும் விடயங்கள்.
எம்மக்கள் படும் துன்ப துயரங்கள் வார்த்தைகளாளோ, எழுத்திலோ விபரிக்க முடியாதை நேரில் பார்த்த சில துயரங்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொண்டோம். துயரங்கள் இன்னும் தொடர் கதையானது…..
இவை எல்லாவற்றிலும் இருந்து எம்மக்களை மீட்க புலம்பெயர் உறவுகளே உங்களால் தான் முடியும். முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் உறவுகளை மீட்புக்கான போராட்டங்களை விரைந்து ஆரம்பியுங்கள். உங்கள் நாடுகளின் அரசாங்கங்களுக்கு அதற்கான அழுத்தங்களைக் கொடுங்கள்.
உங்கள் தாயக உறவுகளை மீட்டு அவர்களை தமது சொந்த இடங்களில் வாழ வைப்பதற்கான வழி வகைகளை ஏற்படுத்துவீர்களானால் அம் அம்மக்கள் உணவுக்காக பிறரிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படாது.
எமது தமிழர் பண்பாடு, தமிழர் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் முட்கம்பி வேலிகளுக்குள் வதைபடும் எம்மக்கள் முதலில் காப்பற்றப்பட வேண்டும். இம்மக்களை மீட்கத் தவறின் எமது கலை, கலாச்சாரம், பண்பாடு என்பன சிதைந்து போகும் என்பதில் ஐயமில்லை.
-ஈழத்திலிருந்து ஒரு குரல்-
முட்கம்பிச் சிறைகளில் இருந்து எம் இனிய உறவுகளை மீட்பதற்கான காத்திரமான போராட்டங்களை அவசரமாக, அவசியமாக முன்னெடுங்கள்.
அவர்களை அவர்களது சொந்த நிலங்களில் வாழ வையுங்கள்.
1 மறுமொழி »
மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI
மறுமொழியவும்
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.






































































பதிவுலக நன்பர்களே – இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் – 1
இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கிறது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்பட கூடியவை பற்றி அறியும் சிறு முயற்ச்சி தான் இந்த பதிவு.
http://oviya-thamarai.blogspot.com/2009/06/1.html
Comment by pratheep — ஜூன்17, 2009 #