நாம்

நாம்

தமிழர்கள் இன்று உலகம் முழுவதிலும் பரந்து வாழ்ந்தாலும் இதனால் யாருக்கு என்ன பயன்?இலங்கையின் தமிழர் தாயகத்தில் வாழ்ந்து us4.jpgகொண்டிருப்போரும் தம் இனத்தை தாமே காட்டிக் கொடுத்து தம் தலை மீதே மண்ணை வாரிப் போடும் இன்றைய சூழ்நிலையினால் இன ஒழிப்பினை மேற்கொள்வோருக்கு சாதகமான சூழ்நிலையினை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.
இன்னும் சிறிது காலத்தில், வெகு விரைவிலேயே தழிழர் தாயகம் உருத்தெரியாமல் சிதைந்து போகுமோ என்ற பயம் உச்ச நிலையை அடைந்துள்ளது.
தமிழின ஒழிப்பு நடவடிக்கையில் தமிழர்களும் பங்கெடுத்துள்ளனர் என்பதையே இங்கு வேதனையுடன் கூறமுற்படுகின்றோம்.
தமிழ் அரச/தனியார் அதிகாரிகள் யுத்தத்தை காரணம் காட்டி சுறண்டலிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்க மறுபுறம் தமிழ்த் தொண்மை,கலை,கலாச்சாரம்,பண்பாடு,சனநாயகம் என்பனவும் சிதைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது.
எனவே பொது மக்களாகிய எங்களுடைய கையில் தான் எம்முடைய சுதந்திரம் உண்டு என்னதை உணர்ந்து இவ் இணையத் தளத்தை உலாவிட்டிருக்கின்றோம்.
எனவே தழிழ் மக்களே எமது மண்ணில் மரணித்த அத்தனை உறவுகளையும் உங்கள் மனக் கண் நிறுத்தி, பெறுமதிமிக்க உங்கள் தகவல்களை  actsee@gmail.com  என்ற முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

வரலாறுகள், உங்கள் அனுபவங்கள், தகவல்கள் என்பவற்றை தமிழன் என்ற பொறுப்புணர்வுடன் எழுதுங்கள்.

1 மறுமொழி »

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

  1. இலங்கையில் புதிய பதிவு ஒன்று இடம்பெறுகிறது அதாவது இலங்கையின் குடிமக்கள் அனைவரும் http://www.citizens.lk என்ற இணையத்தளத்தின் மூலம் சகல விபரங்களையும் பதிய வேண்டும் என அறிவிக்கபடடுள்ளனர்.
    இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பதியாதவர்கள் கடும் விசாரணைக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கபடுவார்கள் என எச்சரித்துள்ளார்.
    இவ்வாறு பதிபவர்களில் தமிழர்களை பிரித்தெடுத்து அவர்களின் வங்கி கணக்குகள் தொடர்பாக ஆராயவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெரிதும் பேசப்படுகிறது.
    இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு பொறுத்திருக்க வேண்டும்


மறுமொழியவும்

XHTML: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.