கவணிக்கவும்!

சுதந்திரத்திற்காக போராடிய எத்தனையோ தேசங்கள் இன்று விடுதலை அடைந்து சுதந்திரக் காற்றை சுவாகிக்கின்றன.
ஆனால் எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் காரணமில்லா சோகங்களை நாமே நமக்குச் சேர்த்து வைத்துள்ளதை மனச்சாட்சி கூறும்.
அமெரிக்காவும் சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் சுதந்தரத்திற்காக இரத்தம் சிந்திய தேசம் தான்.
ஆனால் அவை என்ன செய்கின்றன. சுமார் 60 வருடங்களுக்கு முன்னர் சுதந்திரம் அடைந்த இந்தியாவும் இன்று செய்வதென்ன.
எம் போன்ற அப்பாவிகளை தம் பகடைக் காய்களாக பயன்னடுத்துகின்றனர்.
தமிழனுக்கு இருக்கும் காட்டிக் கொடுக்கும் சுயநல நோயே இன்றைய போரின் நீட்சி.
இன்றைய கியூபாவைப் பாருங்கள் அமெரிக்கா ஆட்டித்தானே பார்த்தது.
மக்கள் தம் தலைவன் மீது கொணடிருந்த நம்பிக்கையின் முன்னால் அரக்கர்களின் சூது எடுபடவில்லை.

எனவே!

“ஜனநாயகம் கருகிக் கொண்டிருக்கும் இலங்கையில் எப்போது அது துளிர் விடுகின்றதோ அப்போது தான் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்”

மக்களே!

இத் தளம் உங்களுக்கானது. உங்களின்  மனப்பூர்வமா தகவல்கள் இதில் பதிவேற்றப்படும்.
இத் தளத்திற்காக நீங்கள் எழுதும் போது எம் மண்ணில் மடிந்த உங்கள் உறவுகளை நினைவு கூர்ந்து உண்மையை எழுதுங்கள்.
நிபந்தனையின்றி ஏற்கப்படும் உங்கள் கருத்துக்களை இத் தளம் சுமக்கும்.
தொடர்புகளுக்கு-ustamil@ymail.com

பின்னூட்டமொன்றை இடுக